உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் நத்தப்பேட்டையில் விபத்து அபாயம்

மின்கம்பி உரசும் மரக்கிளைகளால் நத்தப்பேட்டையில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டையில் இருந்து, நத்தப்பேட்டை வழியாக களியனுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், முத்தாலம்மன் கோவில் எதிரில் சாலையோரம் அமைந்துள்ள வேப்ப மரத்தின் கிளைகள் மின் கம்பிகளை உரசும் வகையில், வளர்ந்துள்ளது. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்துவிழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள வேப்ப மரத்தின் கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை