உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

 பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் ஓடைபோல செல்லும் வெள்ளநீரில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக்., மாதத்தில் இருந்தே காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது, மழை நின்றுள்ள நிலையிலும், வெள்ளநீர் ஓடை போல செல்கிறது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுவர்கள் செவிலிமேடு பாலாறில் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். செவிலிமேடு பாலாறில் மணல் திருட்டு நடந்த பல்வேறு இடங்களில் ஆழம் அதிகம் இருப்பதால், நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவிலிமேடு பாலாறில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைப்பதோடு, பாலாற்றங்கரைக்கு செல்லும் வழியில் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ