மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது
10-Apr-2025
காஞ்சிபுரம்,ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கச்சிப்பட்டு கிராமத்தில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார், 33, ரவுடி. போலீசாரின், 'பல்சர்' இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின்படி, விசாரணை நடத்திய போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர்.சுங்குவார்சத்திரம் பகுதியில், காயலான் கடைகள் நடத்தி வரும் சில உரிமையாளர்களிடம் கத்தி காட்டி பணம் பறிக்க முயன்றதாக, எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், 26. அசோக், 28. ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
10-Apr-2025