மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத சிவகங்கை அம்மா உடற்பயிற்சி கூடம்
02-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து, ஊராட்சிகள் தோறும் மூன்று விதமான விளையாட்டு திடல் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல் வகையில், 25 சென்ட் நிலத்திற்கு மேல், ஆறு வகையான விளையாட்டுகளுடன் கூடிய இரு உடற்பயிற்சி கம்பிகள் மற்றும் இரண்டாவதாக, 10 சென்ட் நிலத்திற்கு மேல், நான்கு வகையான விளையாட்டுகளுடன் கூடிய இரு உடற்பயிற்சி கம்பிகள் அமைக்கப்பட உள்ளன.மூன்றாவதாக, 10 சென்ட்டிற்கு குறைவாக இரு வகையான விளையாட்டுகள் மற்றும் இரு உடற்பயிற்சி கம்பிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் வாயிலாக, பள்ளி குழந்தைகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் இடையே விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
02-Jan-2025