அடையாளம் இழந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு சதாவரம் காந்தி நகரில், வேகவதி ஆற்றில் இணையும் வகையில், மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டி, நீர்வழித்தடம் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.இதனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, இக்கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் அபாயம் உள்ளது.எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள், சதாவரம் காந்தி நகர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.