உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத்தில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடை அகற்ற கோரிக்கை

வாலாஜாபாத்தில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடை அகற்ற கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில் கோவில் அருகே இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென, பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்குகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகாமையில் பச்சயைம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். அச்சாலை பகுதியில் மது பிரியர்கள் போதையில் செய்யும் அட்டகாசத்தால் பச்சையம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி