உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை, ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், 700 சதுர அடியை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார். இதை அகற்ற வேண்டும் என, கோவில் நிர்வாகம் தரப்பில், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, ஹிந்து அறநிலையத் துறையினர், வாலாஜாபாத் காவல் துறையினர், வருவாய் துறையினர் இணைந்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் இருக்கும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை