பள்ளி கட்டடம் இடித்து அகற்றம்
காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி சாலையில், பரந்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி கட்டடம், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சீமை ஓடுகள் வேயப்பட்ட கட்டடமாக இருப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வந்தது.இதனால், மாணவ - மாணவியர் ஊராட்சியின் சமுதாயக்கூட கட்டடத்தில் படித்து வருகின்றனர். நேற்று, பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றும் பணி துவங்கியது.'பள்ளி கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்படும்' என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.