உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சியில் போக்குவரத்து பாதிப்பு

கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சியில் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்:ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. கவர்னர் ரவி சட்டசபைக்கு வந்தவுடன் தேசிய கீதம் முதலில் ஒலிக்கப்பட வேண்டும் என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.ஆனால், தமிழக சட்டசபை மரபுபடி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னர் ரவி தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்ததாக, தமிழக கவர்னர் ரவி மற்றும் பா.ஜ., - அ.தி.மு.க., கள்ள கூட்டணி வைத்திருப்பதாக கூறி தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., - எம்.பி., செல்வம், மாநகர செயலர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கவர்னர் ரவி மற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளை கண்டித்து, அப்போது முழக்கங்களை எழுப்பினர். தி.மு.க.,வினர் 1,000 பேருக்கு மேலாக பங்கேற்ற இக்கூட்டம் காரணமாக, காமராஜர் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ