உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் நுழைவாயிலில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் அவதி

கோவில் நுழைவாயிலில் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள மாகாளேஸ்வரர், குமரகோட்டம், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை