உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேரடி அருகில் குப்பை குவியல் காஞ்சியில் பக்தர்கள் அதிருப்தி

தேரடி அருகில் குப்பை குவியல் காஞ்சியில் பக்தர்கள் அதிருப்தி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தின் அருகில், குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேர், மங்கள தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்ப குளம் அருகில், தேரடி தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது. தேரின் அருகில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பை கொட்டி வருகின்றனர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை தினமும் அகற்றுவதில்லை. இதனால்,தேரடி அருகில் குப்பை குவியலாக சேர்ந்து உள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உத்சவத்தின் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் பவனி வரும் தேரின் அருகில் குப்பை குவிந்துள்ளதால் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏகாம்பரநாதர் கோவில் தேர் நிறுத்தப்பட்டுள்ள, தேரடி அருகில் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை