உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு சான்றிதழ் படிப்பு துவக்க விழா

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு சான்றிதழ் படிப்பு துவக்க விழா

காஞ்சிபுரம்:ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், இந்தியாவின் மிகப்பெரிய சான்றளிப்பு ஆணையமான இமுத்ரா நிறுவனத்துடன் இணைந்து, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த சான்றிதழ் படிப்பின் துவக்க விழா பல்கலையின் மத்திய நுாலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பல்கலை சார்பு துணைவேந்தர் வசந்த்குமார் மேத்தா வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இமுத்ரா நிறுவனத்தின் இணை நிறுவனரும், செயல்பாட்டு துணை தலைவருமான கவுஷிக் ஸ்ரீனிவாசன், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு கல்வியை பிரதான கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கையொப்பம் குறித்து சிறப்புரையாற்றினார். இமுத்ரா நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., தலைவர் லட்சுமி கவுஷிக், டிஜிட்டல் கல்வியறிவு, பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். பல்கலை கணினி மைய இயக்குநர் பாலசந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை