உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் மகளிர் பள்ளி எதிரே கடைகள் அதிகரிப்பால் இடையூறு

வாலாஜாபாத் மகளிர் பள்ளி எதிரே கடைகள் அதிகரிப்பால் இடையூறு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டனா அருகே அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் சுற்றுசுவரையொட்டிய சாலை ஓரத்தில், பல்வேறு கடைகள் இயங்குகின்றன.இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையளர்களால், அப்பகுதியில் அமைதியான சூழல் இல்லாத நிலை உள்ளது. இதனால், மாணவியரின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:வாலாஜாபாத் மகளிர் பள்ளி இயங்கும் சாலை ஓரத்தில், திறந்தவெளியிலும், தள்ளு வண்டிகள் வாயிலாகவும் தொடர்ந்து பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. பொருட்கள் விற்பனைக்காக வியாபாரிகள் போடும் கூப்பாடு காரணமாக பள்ளியில் மாணவிகளின் கவனம் திசை திரும்பும் வாய்ப்புள்ளது. மேலும், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை உண்ட பின் அதன் தோல் உள்ளிட்ட சக்கைகள், சாலை ஓரங்களில் குவிக்கப்படுவதால் கொசு அதிகரிப்பு போன்ற சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே, வாலாஜாபாத் மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரே, சாலை ஓரம் இயங்கும் கடைகளை மாற்று இடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை