மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சீனியர் ஆடவர் பிரிவு பூப்பந்தாட்ட போட்டி, 'ரீயூனியன் பூப்பந்தாட்ட குழு நாயக்கன்பேட்டை' சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் ரமேஷ்,செயலர் ஜனார்த்தனன், பொருளாளர் பாலாஜி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில், மாவட்டம்முழுதும் எட்டு அணிகள் பங்கேற்றன.இதில், நாயக்கன்பேட்டை பூப்பந்தாட்ட குழுவினர் முதல் பரிசும், ரீயூனியன் பூப்பந்தாட்ட குழு நாயக்கன்பேட்டை அணியினர் இரண்டாம் பரிசும் பெற்றனர். இதில், முதலிரண்டு இடங்களை பிடித்தகுழுவினருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டன.வரும் 28, 29ம் தேதிகளில், செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்ற 10 வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு ரீயூனியன் சங்க செயலர் கணேஷ், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், உதவி செயலர் ஞானமலர் உள்ளிட்டோர் பாராட்டினர்.