உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா

பயன்பாட்டில் இல்லாத சிறுவர் பூங்கா

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சிறுவர்கள் விளையாட விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, பூங்கா பயன்பாட்டில் இல்லாமல், வளாகத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. சிறுவர் பூங்கா பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களின் குடியிருப்பாக மாறி வருகிறது. தொடர்ந்து பூங்கா பூட்டியே நிலையிலே இருப்பதால், சிறுவர்களின் விளையாட்டு திறனை வளர்த்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது. பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டும், ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே, சிறுவர் பூங்காவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ