மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
8 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
8 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
8 hour(s) ago
காஞ்சிபுரம்:ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோடைக்காலம் துவங்கும் போதெல்லாம், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., என, பிரதான அரசியல் கட்சியினர், அனைத்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம்.இந்தாண்டு கோடைக்காலம் துவங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த இடத்திலும் அமைக்கவில்லை. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றே அமலுக்கு வந்துள்ளது. இதன்பின், தண்ணீர் பந்தல் அமைத்தால், வேட்பாளரின் செலவினங்களில், தண்ணீர் பந்தல் அமைத்த செலவு கணக்கில் வரும் என்பதால், அவற்றை அமைக்காமல் கடந்து செல்வர் என, அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரத்தில் கடந்தாண்டு பிரதான சாலைகளில் அரசியல் கட்சியினர் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்தனர். சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் பலருக்கும் தண்ணீர் பந்தல் உபயோகமாக இருந்த நிலையில், இந்தாண்டு, அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago