உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பேருந்து நேர காப்பாளர் அறையில் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் சேதம்

காஞ்சி பேருந்து நேர காப்பாளர் அறையில் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் சேதம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தடம் எண் 79, அரசு பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலக கூரை, மழைக்கு ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலைய அலுவலக கூரையின் ஒரு பகுதியில், காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண் 79, அரசு பேருந்துக்கான நேர காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் பணிமனை மேலாளர், பேருந்து நிலைய உதவி பொறியாளர், நேர காப்பாளர், பேருந்து நடத்துநர், டிரைவர், பேருந்து வந்து செல்லும் விபரம் அறிய வரும் பயணியர் என, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தின் கூரை சேதமடைந்து உள்ளது. இதனால், மழைநீர், நேர காப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப் படும் பதிவேடுகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. மேலும், கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வருவதால், நாளடைவில் கூரை முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சி புரம் பேருந்து நிலையத்தில், மழைக்கு ஒழுகும், நேர காப்பாளர் அலுவலக கூரையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை