உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ரூ.1.63 லட்சம் உண்டியலில் காணிக்கை

 ரூ.1.63 லட்சம் உண்டியலில் காணிக்கை

உத்திரமேரூர்: திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியல் மூலம், 1.63 லட்சம் ரூபாய் காணிக்கை நேற்று கிடைத்தது. உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடலில் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, திரளாக பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில், கோவிலக உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி, உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா முன்னிலையில் நேற்று நடந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்கள் திறக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், உண்டியல் காணிக்கையாக, 1 லட்சத்து, 63,000 ரூபாய் இருந்தது. இந்த காணிக்கை பணம் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் யூகுல்ராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ