மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (05.12.2025) காஞ்சிபுரம்
17 minutes ago
பாலாறு நீர் வரத்தால் நிரம்பிய அவளூர் ஏரி
04-Dec-2025
கார்த்திகை மாவளி விற்பனை மழையால் மந்தம்
04-Dec-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, துணை மேயர் வார்டில் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதன் துணை மேயராக உள்ளார். இவர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், 22வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு உடையார் தெருவில் பெய்யும் மழைநீர், சின்ன வேப்பங்குளத்திற்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மண் கால்வாயாக இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், கால்வாயில் செடி, கொடிகளாலும், மண் திட்டுகளாலும் துார்ந்து உள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால் இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. மேலும், காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, சின்ன வேப்பங்குளத்திற்கு செல்லும் மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வார, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
17 minutes ago
04-Dec-2025
04-Dec-2025