உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்

650 பயனாளிகளுக்கு கனவு இல்ல வீடு ஆணை வழங்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், 2025 --- 26ம் நிதி ஆண்டின், 'கனவு இல்ல' வீடு கட்ட, பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார். துணை ஒன்றியக் குழு தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சூர்யா முன்னிலை வகித்தனர்.உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, 650 பயனாளிகளுக்கு தலா, 3.5 லட்சம் மதிப்பில், வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சரஸ்வதி, ஒன்றிய தி.மு.க., செயலர்கள் ஞானசேகரன், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி