வீடியோ வாயிலாக போதை விழிப்புணர்வு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலர் சாந்தி தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையினர், மது அருந்துவதால் கல்லீரல் தொடர்பான வயிற்றுபுண், மஞ்சள் காமாலை, இதய நோய்கள், நரம்பு சிதைவு, நீரிழிவு, கண் பார்வை பாதிப்புகள் மற்றும் தவிர்க்கும் விதங்கள் குறித்து, விழிப்புணர்வு வீடியோ காண்பிக்கப்பட்டன.அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.