உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி., நியமனம்

உத்திரமேரூர் உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி., நியமனம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் உட்கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபையில் 2025 --- 26ம் ஆண்டிற்கான, காவல்துறை மானிய கோரிக்கையின் போது, உத்திரமேரூரில் டி.எஸ்.பி., உட்கோட்ட அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர், வாலாஜாபாத், மாகரல் ஆகிய ஐந்து காவல் நிலையங்களை சேர்த்து, உத்திரமேரூர் காவல் உட்கோட்டம் செயல்படும் என்று, காவல்துறை தலைமை அலுவலகம், கடந்த மாதம் 31ம் தேதி ஆணை பிறப்பித்தது. அதற்காக, இடம் தேர்வு செய்யப்பட்டு சொந்தமாக கட்டடம் கட்டப்படும் வரை, வாடகை கட்டடத்தில் அலுவலகத்தை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் என்பவரை, உத்திரமேரூர் காவல் உட்கோட்டத்திற்கு, புதிய டி.எஸ்.பி.,யாக நியமித்து, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை