மேலும் செய்திகள்
துரியோதனன் படுகளம் திருப்போரூரில் விமரிசை
23-Jun-2025
உத்திரமேரூர்:அண்ணாத்துார் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதன படுகளம் நிகழ்ச்சி நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, அண்ணாத்துார் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மே 31ல் அக்னி வசந்த விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஜூன் 13 முதல் நேற்று வரை, தினமும் மதியம் 2:00 மணி முதல் 6:00 மணி வரை, வெண்மணியாத்துார் மகாபாரத சொற்பொழிவளார் செல்வம் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. இரவு அய்யனாரப்பன் நாடக குழுவினரின் மகாபாரத நாடகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, துரியோதன படுகள நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. அதில், துரியோதனன், பீமன் வேடமிட்ட நடிகர்கள், துரியோதன படுகளநிகழ்ச்சியை நடித்து காட்டினர். திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
23-Jun-2025