உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவருக்கு 15 ஆண்டு சிறை

சென்னை: மயிலாப்பூர் பகுதியில், நேபாள நாட்டை சேர்ந்த தம்பதி, தங்களின் ஆறு வயது மகளுடன் சாலையோரம் வசித்து வந்தனர். கடந்த மார்ச்சில், மயிலாப்பூரைச் சேர்ந்த செய்யது சாலி பிரான், 60, என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செய்யது சாலி பிரானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், செய்யது சாலி பிரானுக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு, இழப்பீடாக 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி