மேலும் செய்திகள்
குளத்தில் மூழ்கி முதியவர் இறப்பு
23-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளத்தில் துணி துவைக்க சென்ற மூதாட்டி தவறி விழுந்து இறந்தார். காஞ்சிபுரம் நகரில் உள்ள தாயார்குளம் அருகே வசிப்பவர் சரஸ்வதி, 70. இவர், தன் வீட்டருகே உள்ள தாயார்குளத்தில் துணி துவைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்றும், துணி துவக்க குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தவறி குளத்தில் விழுந்து மூழ்கி இறந்தார். மூதாட்டி இறந்தது குறித்து அங்கு வசிப்போர், அவரது மகள் சுமதியிடம் தெரிவித்துள்ளனர். குளத்திலிருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மூதாட்டியின் மகள் சுமதி, காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
23-Sep-2025