உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் மின்கம்பம் பாதசாரிகள் கடும் அவதி

சாலையோரம் மின்கம்பம் பாதசாரிகள் கடும் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து நெல்வாய் கூட்ரோடு வழியாக, புக்கத்துறை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இச்சாலையில், கடந்த 2022ல், 54 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த கட்டடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அகற்றப்பட்டன.ஆனால், அகற்றப்பட்ட மின் கம்பங்களை முழுதுமாக அப்புறப்படுத்தாமல், உத்திரமேரூர் பகுதியில் உள்ள சாலையோரத்தில் இரு மின்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மின் கம்பங்கள் இருப்பதை அறியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், உயர் மின்னழுத்த கம்பிகளும் சாலையோரத்திலே போடப்பட்டு உள்ளது. எனவே, நெடுஞ்சாலையோரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை அப்புறப்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !