மின்வாரிய பொறியாளர் ஆபீஸ் இடம் மாற்றம்
சென்னை, தமிழக மின் வாரியத்தின், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகம் வரும், 2ம் தேதி முதல், பெரம்பூர், ஐ.சி.எப்., காலனி, அம்பேத்கர் சாலையில் உள்ள, 110/ 33 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அருகில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.