மேலும் செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து திருட்டு
17-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் இருந்து சீயமங்கலம் பகுதிக்கு செல்லும் சாலையில், கணினி சேவை மையம், முடி திருத்தும் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவில், முடி திருத்தும் கடை பூட்டை உடைத்து, முடிவெட்டும் இயந்திரம் மற்றும் கணினி சேவை மையத்தின் பூட்டு உடைத்து, உள்ளே இருந்த மின்னணுப் பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.வாலாஜாபாத் போலீசார், திருட்டு நடந்த கடைகளில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
17-Mar-2025