உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவி தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவி தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்,:இளைஞர் நீதி சட்டத்தின் விதிமுறைகளின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம் அல்லது கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான பணிகளில் குறைந்தது, 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது https://dsdcpimms.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தகுதியான நபர்கள், சென்னை, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ