மழைநீர் கால்வாய் துார்வார வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் நகர், திருக்காலிமேடு அருந்ததியர் நகர், மாநகராட்சி 23வது வார்டு நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் கால்வாய் துார்வாரும் பணி விடுபட்டுள்ளது.இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் செல்வதில் இடையூறு ஏற்படும் சூழல் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், மஞ்சள்நீர் கால்வாயை முழுமையாக ஆய்வு செய்து விடுபட்ட இடங்களில், கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.