உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிட்டியம்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

சிட்டியம்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

சிட்டியம்பாக்கம் : வாலாஜாபாத் ஒன்றியம், சிட்டியம்பாக்கத்தில்இருந்து வையாவூர் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக ஏனாத்துார், கவுரியம்மன்பேட்டை, மருதம், கரூர், தென்னேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையின் குறுக்கே மழை நீர் செல்லும் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.தெருமின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போதும், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும், நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. அதேபோல, கால்வாயில் செல்லும் தண்ணீரை குடிக்க செல்லும் கால்நடைகளும் கால்வாயில் தவறி விழுந்துவிடுகின்றன.எனவே, சிட்டியம்பாக்கத்தில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், கால்நடை விவசாயிகளும்வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ