| ADDED : நவ 19, 2025 04:44 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கடுவஞ்சேரி சாலையோரம் மண் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்து ார் சாலையில், பிள்ளைப்பாக்கத்தில் இருந்து, கடுவஞ்சேரி, கண்ணந்தாங்கல் சாலை பிரிந்து செல்கிறது. குண்டுபெரும்பேடு, வளத்தாஞ்சேரி, கடுவஞ்சேரி, கண்ணந்தாங்கல் பகுதி மக்கள், ஸ்ரீ பெரும்புதுார் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. பிள்ளைபாக்கம் ஏரிக்கரையை ஒட்டி செல்லும் இந்த சாலையில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, இவ்வழியாக செல்லும் தனியார் பள்ளி பேருந்துகள், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் கொட்டி சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.