உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

பழங்குடி குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

மண்ணுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மண்ணுார் ஊராட்சியில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில், பழங்குடியினருக்கு, 44 குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன.இதேபோல, காட்டரம்பாக்கம் ஊராட்சியில்,1.82 கோடி ரூபாய் மதிப்பில், பழங்குடியினருக்கு, 36 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.இந்த பணிகளைகாஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பழங்குடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும், கட்டுமான பணி விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை