மழைநீர் வடிகால் துார் வார மாம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு
ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.இதை, ஊராட்சி நிர்வாகம் முறையாக துார் வாரி பராமரிப்பது இல்லை. இதனால், மழைநீர் வடிகால் துார்ந்துள்ளது.பிளாஸ்டிக் பாட்டில், குப்பை, மண் திட்டுகள் உள்ளிட்டவை, கால்வாய் முழுதும் படிந்து உள்ளது.இதனால், கழிவுநீர் வடிய வழியின்றி, கால்வாயில் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதிவாசிகள் அவதி அடைந்து வருகின்றனர்.அதேபோல், மழைக்காலங்களில் மழை நீர் கால்வாயில் வடியாமல், வீடுகளை சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மழைநீர் வடிகலை துார் வாரி சீரமைக்க, மாவட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் வைத்துள்ளன.