உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி

கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தில், 41வது கண் தான விழிப்புணர்வு வாரவிழாவின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் குமார்ஸ் கண் மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி நேற்று நடந்தது. குமார்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மோகன்குமார், கார்த்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் ரோட்டரி சங்க தலைவர் மருத்துவர் ஸ்ரீராம், செயலர் பாக்யராஜ், முன்னாள் தலைவர் குமார் ஆகியோர் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், செயின்ட் மேரீஸ் துணை சுகாதார அறிவியல் நிறுவன மாணவியர், குமார்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை