உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலை பஸ், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து

தொழிற்சாலை பஸ், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து

ஸ்ரீபெரும்புதுார்:வேலுார் அருகே ராணிப்பேட்டையில் இருந்து, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, நேற்று அதிகாலை ‛மாருதி ஸ்விப்ட்' கார் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த இருங்காட்டுக்கோட்டை அருகே வந்த போது, சாலையோரம் விபத்தில் உயிரிழந்த குதிரையை பார்த்த ஓட்டுனர், காரின் வேகத்தை குறைத்தார். அப்போது, பேரம்பாக்கத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த தொழிற்சாலை பேருந்து, காரின் பின்னால் மோதியது.இதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்து காலி மதுபாட்டில் ஏற்றிக் கொண்டு தண்டலம் வந்த 'ஈச்சர்' லாரி, தொழிற்சாலை பேருந்தின் பின்னால் மோதியது.இதில், காரின் பின்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்தால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி