உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போலி மருத்துவர் மண்ணுாரில் கைது

போலி மருத்துவர் மண்ணுாரில் கைது

ஸ்ரீபெரும்புதுார்:திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை அன்பரசி நகரைச் சேரந்தவர் சார்லஸ், 46. இவர், கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே வளர்புரம் கிராமத்தில், கிளினிக் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார்.பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, மாவட்ட சுகாதார துறைக்கு புகார் வந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை இணை ஆணையர் ஹீலாரின் ஜொஷிடா நளினி தலைமையில், நேற்று முன்தினம் சார்லஸ் கிளினிக்கை தணிக்கை செய்ததில், அவர் போலி மருத்துவர் என உறுதியானது.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை