உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சின்ன அழிசூரில் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் அவதி

சின்ன அழிசூரில் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் அவதி

உத்திரமேரூர்:சின்ன அழிசூரில் மின்மாற்றி பழுதால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் ஊராட்சியில், இருளர் காலனி, சின்ன அழிசூர், நந்தவனம், அழிசூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியில், விவசாயிகள் விளை நிலங்களுக்கு ஏரி மற்றும் ஆழ்த்துளை கிணறு வாயிலாக, தண்ணீர் பாசனம் செய்து வருகின்றனர்.தற்போது, சின்ன அழிசூர் பகுதியில் உள்ள மின்மாற்றி, இரண்டு நாட்களுக்கு முன் பழுதடைந்ததால், விவசாயிகள் மின்மோட்டாரை இயக்கி, நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.மேலும், இந்த மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பை பெற்றுள்ள 10 வீடுகளுக்கு, இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் உள்ளது. இதனால், மின்சாதனப் பொருள்களை பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது.எனவே, சின்ன அழிசூரில் பழுதடைந்துள்ள மின்மாற்றியை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை