உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாதந்தோறும், கலெக்டர் தலைமையில், நடைபெற்று வருகிறது.அந்த வகையில், ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை மறுதினம், காலை 10:30 மணிக்கு நடைபெறும் என, அறிவிப்பு வெளிடப்பட்டிருந்தது.இந்நிலையில், நிர்வாக காரணங்களால், வரும் 27ம் தேதி நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.அன்றைய தினம், காலை 10:30 மணிக்கு வழக்கம்போல, கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, மின்வாரியம், வருவாய் துறை என, வேளாண் தொடர்பான துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை