மேலும் செய்திகள்
வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
21-Sep-2025
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
17-Sep-2025
காஞ்சிபுரம்;விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும், 24ம் தேதி நடக்க இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும், 24ம் தேதி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் பல துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். வேளாண் துறை, தோட்டக்கலை, மின் வாரியம், வருவாய், கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம். இது தவிர, சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதம்; இதர விவசாயிகளுக்கு 75 சதவீதத்தில் மானியத்துடன் நுண்ணீர் பாசன திட்டம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார், நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், போட்டோ, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் அலுவலகத்தை நாடலாம். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண் தொடர்பான தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
21-Sep-2025
17-Sep-2025