உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் முட்டு கொடுத்த விவசாயிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் முட்டு கொடுத்த விவசாயிகள்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் - ஈஞ்சம்பாக்கம் - சிறுவாக்கம் - மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது.காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர்மற்றும் வாகன ஓட்டிகள் கூரம் கேட் வழியாக, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம்,மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர். இதில், மோட்டூர் - சிறுவாக்கம் சாலை குறுக்கே மின் வழித்தடம்செல்கிறது.இந்த மின்வழித்தடம் தாழ்வாக செல்வதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதிய விவசாயிகள், சாலையின் இருபுறமும் கம்புகள் வாயிலாக முட்டு கொடுத்து, மின்கம்பியை துாக்கி கட்டியுள்ளனர்.பலத்த காற்று அடிக்கும் போது, கம்புகள் சரிந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மோட்டூர் - சிறுவாக்கம் கிராமத்திற்கு இடையே, மின் வழித்தடத்திற்கு கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ