உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முருகன் கோவிலில் செடி, கொடிகள் விஷ ஜந்துகளின் நடமாட்டத்தால் பீதி

முருகன் கோவிலில் செடி, கொடிகள் விஷ ஜந்துகளின் நடமாட்டத்தால் பீதி

உத்திரமேரூர்உத்திரமேரூரில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், பாலசுப்பிரமணியன் கோவில் உள்ளது. உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் முருகன் கோவில் இல்லாததால், இக்கோவிலுக்கு முருகன் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து வழிபடுவது வழக்கம்.இந்த கோவிலில் கிழக்கு நோக்கி ஐந்து நிலையிலான ராஜகோபுரமும், வெளிப்பிரகார இடதுபுறம் ஊஞ்சல் மண்டபம், வலதுபுறத்தில் வசந்த மண்டபம், நடுவே பலிபீடம் மற்றும் கொடிமரம் என, அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது.கருவறையில் முருகப்பெருமானான பாலசுப்பிரமணியன், 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது முன்புறம் வேலும், சேவல் கொடியும், பாதத்தின் அருகே மயில் வாகனம் உள்ளது.இத்தலத்தில், முருகனின்இரு துணைவியரானதெய்வானையும், வள்ளியும் ஒன்றாக வடிவம் கொண்டு, கஜவல்லியாக வீற்றிருப்பது அபூர்வகாட்சியாக உள்ளது.இவ்வாறான சிறப்பு மிக்க இக்கோவிலின் வெளிப்புற வளாகம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. கோவிலை சுற்றி உள்ள நடைபாதை ஓரங்களில் முட் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. கோவில் அருகே உள்ள மண்டபத்தை செடிகள்சூழ்ந்துள்ளன.கோவிலை சுற்றி உள்ளசெடி, கொடிகளை அகற்றா ததால், விஷ ஜந்துக்கள்நடமாட்டம் உள்ளது. எனவே, கோவில் வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி