உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விசூர் அரசு தொடக்க பள்ளியில் ரூ.10 லட்சத்தில் விழா மேடை

விசூர் அரசு தொடக்க பள்ளியில் ரூ.10 லட்சத்தில் விழா மேடை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் அரசு தொடக்க பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்போது, பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்க பள்ளி நிர்வாகத்தினர் சிரமப்பட்டு வந்தனர்.பள்ளியில் விழா மேடை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.தற்போது, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி.,யாக செல்வம் உள்ளார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கும் பணி விரைந்து துவங்க உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ