உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழித்தட்டில் நாற்று உற்பத்தி மாணவர்களுக்கு களப்பயிற்சி

குழித்தட்டில் நாற்று உற்பத்தி மாணவர்களுக்கு களப்பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பாடப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, நேரடி பண்ணை பயிற்சி திட்டத்தில், மேல்கதிர்பூர் தோட்டக்கலை பண்ணைக்கு சென்றனர்.மேல்கதிர்பூர் தோட்டக்கலை பண்ணை அலுவலர் தினேஷ்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் நந்தகுமார் ஆகியோர், மாணவர்களுக்கு, குழித்தட்டு வாயிலாக நாற்று உற்பத்தி மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பம் குறித்து, செயல் விளக்கத்துடன் கூடிய களப்பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !