மேலும் செய்திகள்
தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
13-Oct-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உத்திரமேரூர் தீயணைப்பு துறையின் சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவியருக்கு வீடுகளில் உள்ள காஸ் அடுப்பில் கசிவு ஏற்படும்போது, எவ்வாறு செயல்படுவது குறித்தும் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இதில், தீயணைப்பு வீரர்கள், ஆசிரியர்கள், மாணவியர் என பலர் பங்கேற்றனர்.
13-Oct-2025