உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

உத்திரமேரூர்:தமிழகம் முழுதும் ஏப்.14ம் தேதி முதல், 20ம் தேதி வரை தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையில், பட்டஞ்சேரி கிராமத்தில் நேற்று, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.அப்போது, தீ விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான வழிமுறைகளும், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் விளக்கமாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ