மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு
12-Oct-2025
விழிப்புணர்வு குறைவால் காய்ச்சல் தீவிரம்!
26-Sep-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையங்களில், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒரகடம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடந்த தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதில், தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது, வெளியேறுவது குறித்தும், பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்தும், தீயணைப்பு துறை வீரர்கள் செயல் முறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் பாஸ்கர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வடிவேலு, ஞானவேல் ஆகியோர் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, பேரிடர் கால செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை, உத்திரமேரூர் தீயணைப்பு நிலையங்களிலும் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்தது. உபகரணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
12-Oct-2025
26-Sep-2025