உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புயலுக்கு வேருடன் சாய்ந்த மரங்கள் தீயணைப்பு துறையினர் அகற்றம்

புயலுக்கு வேருடன் சாய்ந்த மரங்கள் தீயணைப்பு துறையினர் அகற்றம்

காஞ்சிபுரம்:வங்க கடலில் உருவான ‛பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் நேற்று காலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் தாயாரம்மன் குளக்கரை சாலையோரம் இருந்த 20 ஆண்டு பழமையான காட்டுவா வகை மரம் ஒன்று சாலையில் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.இதேபோல, காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, காந்தி நகரில், சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது. இதையடுத்து, தீயணைப்பு, மாநகராட்சி, மின்வாரியத்தினர் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த புளிய மரத்தை வெட்டி அகற்றினர்.

பள்ளத்தில் சிக்கிய பசு மீட்பு

காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல், பாரதி தோட்டம் பகுதியில் ஆறு அடி ஆழ பள்ளத்தில் பசு ஒன்று சிக்கி உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டனர் என, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ