வைப்பூர் ஊராட்சியில் கொடிகம்பங்கள் அகற்றம்
ஸ்ரீபெரும்புதுார்:தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி, சாதி, மத ரீதியிலான கொடிகம்பங்களை 12 வாரத்திற்குள் அகற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜன., 27ம் தேதி உத்தர விட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட, வஞ்சுவாஞ்சேரி, காரணித்தாங்கல், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆறு கட்சி கொடி கம்பங்களை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று அகற்றினர்.