உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இலவச மரக்கன்றுகள் பெற வனத்துறையினர் அழைப்பு

இலவச மரக்கன்றுகள் பெற வனத்துறையினர் அழைப்பு

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். உத்திரமேரூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, கைத்தண்டலத்தில் வனத்துறையின் நாற்றங்கால் பண்ணை உள்ளது. இந்த நாற்றங்காலில் நிழல் மற்றும் பழம் தரக்கூடிய 40,000 மரங்களின் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள மரக்கன்றுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, உத்திர மேரூர் வனச்சரக அலுவலர் ராமதாஸ் கூறியதாவது: உத்திரமேரூர் வட்டாரத்தில், விவசாய நிலங்கள், கல்லுாரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் மரங்களை வளர்க்க, ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் விரும்பினால் அவர்களது நிலங்களில் வனத்துறை சார்பில், தேக்கு, மா, செம்மரம் ஆகிய மரக்கன்றுகள் நட்டு தரப்படும். அதேபோல, கல்லுாரிகள், பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் நாவல், புளிய மரம், புங்கன் மரம், ஆலமரம் ஆகிய மரக்கன்றுகளும் நட்டு தரப்படும். இதற்கு விண்ணப்பிக்க, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் உத்திரமேரூர் வனச்சரக அலுவலகத்தை அணுகவும். மேலும், விபரங்களுக்கு, 95977 49906, 91598 06994 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !